நீண்ட நாள் களித்து நடனமாடும் நடிகை மீனா!

பா.க.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் வரும் 16 ஆம் தேதி பெங்களூர் அரண்மையின் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்காக ஜனார்த்தன ரெட்டி, உருவாக்கிய அழைப்பதில் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு நலுங்கு வைக்கும் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்காக பிரத்யேகமாக 40 பாடல்கள் உருவாக்கப்பட்டு அது தனியாக சிடியாக தயாரிக்கப்பட்டிருந்தது. மணமகளை வாழ்த்துவது போன்ற இந்த பாடல்கள் ஒலிபரப்பட்டதும், நடிகைகள் சினேகா, மீனா, ராதிகா, ராதா, நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்.

More