தைபூன் சூறாவளி: வியட்நாமில் 27 பேர் பலி

தைபூன் சூறாவளி: வியட்நாமில் 27 பேர் பலி

வியட்நாமின் வடக்கு பகுதியில் கை டாக் என்று பெயரிடப்பட்ட தைபூன் சூறாவளி கடுமையாக தாக்கியது. சீனாவிலிருந்த வந்த இந்த கடுமையான சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்த்த மழைக்கு அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு, நிலச்சரிவில் சிக்கி மற்றும் வீடுகள் இடிந்து விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 27 ஆக உயர்ந்துள்ளது.

வார இறுதி நாட்களில் தாக்கிய இந்த சூறாவளிக்கு 12,000 வீடுகள் சேதமடைந்து, 56,800 ஏக்கரில் பயிரிடப்பட்ட நிலங்கள் தண்ணீரில் முழ்கியுள்ளன.  திடீரென ஏற்பட்ட வெள்ளத்திற்கு தலைநகர் ஹனோய்ல் உள்ள பெரும்பாலான பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் துணையுடன் 20,000 ராணுவவீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…