தென்னிந்திய நடிகர் சங்கம் செய்தி 14.06.2017

மாலத்திவுக்கான,இந்திய அரசு தூதர் திரு.அகிலேஷ் மிஸ்ரா அவர்கள் 13.6.17 முதல் 15.6.17 வரை இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக 14.6.17 அன்று சென்னைக்கு வருகைப்புரிந்து பல நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். அப்பொழுது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நலன் மற்றும் அதன் செயல்பாடுகளை அறிந்துக்கொள்ள இசைந்துள்ளார்கள்.
எனவே இன்று 14.6.17 தென்னிந்திய வர்த்தக சபை அலுவகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, உதயா A.L, லலிதாகுமாரி ஆகியோர் திரு.அகிலேஷ் மிஸ்ரா அவர்களை சந்தித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்க செயல்பாடுகளை கேட்டு அறிந்து தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
– தென்னிந்திய நடிகர் சங்கம்