சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 2016-2017 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 2016-2017 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

சோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ,
மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும்,நினைவுபரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சோளிங்கர் என்.ரவி அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்…

இந்த நிகழ்ச்சியில் நான் நெகிழ்ந்த சில நிகழ்வுகள்.

பெரும்பாலான இது போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நின்று கொண்டும், பரிசு வழங்குபவர்கள் அமர்ந்து கொண்டும் இருப்பார்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை அமர வைத்து அவர்கள் மத்தியில் நின்று கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் என். ரவி அவர்கள் பேசினார். மேலும் அவர் படிப்பின் மேன்மையை பற்றியும் மாணவர்கள் மீதான அவரது பற்றையும் மிகத் தெளிவாக விளக்கினார்.

நிகழ்ச்சியில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உருவம் பதித்த நினைவுப் பரிசையும், ஊக்கத்தொகையும் ரவி அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.