குஜராத்தில் பாஜகவுக்கு சரிவு.. காங்கிரஸ் திடீர் முன்னேற்றம்.. கருத்துக் கணிப்பில் சுவாரசிய தகவல்

அரசியல் சுனாமி வருகிறது…ராகுல் காந்தி- வீடியோ டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது ரொம்ப சுலபமாக இருக்காது என்கிறது கருத்துக் கணிப்பு தகவல்கள். டெல்லியை சேர்ந்த லோக்நிதி மற்றும் சென்டர் ஆப் ஸ்டடி டெவலப்பிங் சொசைட்டிஸ் ஆகியவை இணைந்து, ஏபிபி என்ற செய்தி சேனலுக்காக நடத்திய கருத்து கணிப்பில், புதிய தகவல்கள் வெளியே வந்துள்ளன. அது காங்கிரசுக்கு உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது. குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நடுவே இங்கு நேரடி போட்டி உள்ளது. இந்த நிலையில், இவ்வாண்டு, அக்டோபர் 26ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதிவரை நடத்திய லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து கணிப்பு இப்படித்தான் இந்த கருத்துக் கணிப்பு 200 இடங்களில் 3757 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் இந்த கருத்து கணிப்பு சுமார் 50 தொகுதிகளை தொட்டுச் சென்றுள்ளது. ஆகஸ்ட் மாதம், இதே சர்வே அமைப்புகள் கருத்து கணிப்பு நடத்திய பகுதிகளில் இருந்து இது மாறுபட்டது.

காங்கிரஸ் முன்னேற்றம் இந்த லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் பாஜகவின் வாக்கு சதவீதம் 47 என்ற அளவிலும் காங்கிரஸ் வாக்கு சதவீதம் 41 என்ற அளவிலும் இருப்பது தெரியவந்துள்ளது. காங்கிரசுக்கு இது 12 சதவீதம் கூடுதல் வாக்குகள் என்பது கவனிக்கத்தக்கது. பாஜகதான் இப்போதும் லீடிங்கில் இருக்கிறது என்றபோதிலும், முந்தைய கருத்துக் கணிப்புடன் ஒப்பிட்டால் காங்கிரஸ் படு வேகமாக முன்னேறியுள்ளது தெரியவருகிறது.

பாஜக செல்வாக்கு சரிந்துள்ளது சவுராஷ்டிரா பகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளுமே 42 சதவீத வாக்கு வங்கியுடன் சரிசமமாக உள்ளன. வடக்கு குஜராத் பகுதியில் காங்கிரஸ் 49 சதவீத வாக்கு வங்கியையும், பாஜக 42 சதவீத வாக்கு வங்கியையும் வைத்துள்ளதாக இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இவ்விரு பிராந்தியங்களிலும் மொத்தம் 107 சட்டசபை தொகுதிகள் உள்ளன எனபது காங்கிரசுக்கு சாதகமான அம்சம்.

பாஜகவுக்கு பின்னடைவு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் எடுத்த சர்வேயில் பாஜகவுக்கு 59 சதவீதம் பேரும், காங்கிரசுக்கு 29 சதவீதம் பேரும், பிறருக்கு 12 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். ஆனால் இந்த லேட்டஸ்ட் சர்வேயில் பாஜக ஆதரவு 47 சதவீதமாக குகறைந்துள்ளது. காங்கிரசுக்கு 41 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். பிறருக்கு 12 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். பாஜக 12 சதவீத வாக்குகளை இழந்துள்ள நிலையில், காங்கிரஸ் அதே அளவு வாக்குகளை ஈர்த்துள்ளது.

தொகுதி வாரியாக நிலவரம் சவுராஷ்டிரா பகுதியில் (மொத்தம் 54 தொகுதிகள்) பாஜக மற்றும் காங்கிரசுக்கு தலா 42 சதவீத வாக்குகள் உள்ளன. முன்பிருந்த நிலையை ஒப்பிட்டால், பாஜகவுக்கு இது 23 சதவீத இழப்பு. காங்கிரசுக்கு 16 சதவீத லாபம். வடக்கு குஜராத் பகுதியில் (53 தொகுதிகள்), 15 சதவீத ஆதரவை இழந்த பாஜக 44 சதவீத வாக்குகளையும், 16 சதவீதம் கூடுதல் லாபம் பெற்றுள்ள காங்கிரஸ் 49 சதவீதம் வாக்குகளையும் பெறும் என்கிறது கருத்துக் கணிப்பு.

மாறலாம் 40 தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய குஜராத்தில் பாஜகவுக்கு 54 விழுக்காடு ஆதரவு உள்ளது. இருப்பினும் முந்தைய நிலையை ஒப்பிட்டால் இது 2 சதவீத வீழ்ச்சி. அதேநேரம் காங்கிரஸ் 8 சதவீத வாக்குகளை கூடுதலாக ஈர்த்து 38 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. தெற்கு குஜராத்தில் 35 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு 3 சதவீத வாக்குகளை இழந்து 51 சதவீத வாக்குகளை பாஜக பெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் 6 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்று 33 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கும்போது இந்த நிலை மேலும் காங்கிரசுக்கு சாதகமாக மாறவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.